உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேம்ஸ் வாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19: வரிசை 19:
1776 ஆம் ஆண்டில், முதல் நீராவி இயந்திரங்கள் நிறுவப்பட்டு, வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்தன. இந்த முதல் இயந்திரங்கள் விசையியக்கக் திறனை வழங்க குழாய்களுக்குப் பயன்படுத்தப்பட்டன, அவை தண்டுகளின் அடிப்பகுதியில் குழாய் கம்பிகளை நகர்த்துவதற்கான ஒரே பரிமாற்ற இயக்கத்தை மட்டுமே உருவாக்கின. இந்த வடிவமைப்பு வணிகரீதியாக வெற்றிகரமாக இருந்தது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வாட் அதிக இயந்திரங்களை நிறுவினார், குறிப்பாக கார்ன்வால் என்ற இடத்தில் உள்ள சுரங்கங்களில் இருந்து நீரை வெளியேற்றுவதற்காக நிறுவினார்.

இந்த ஆரம்ப இயந்திரங்கள் பவுல்டன் மற்றும் வாட் ஆகியோரால் தயாரிக்கப்படவில்லை, ஆனால் வாட் அவர்களால் வரையப்பட்ட வரைபடங்களின் அடிப்படையில் மற்றவர்களிடமிருந்து தயாரிக்கப்பட்டது, வாட் அவர்கள் ஆலோசக பொறியியலாளராக மட்டுமே பணியாற்றினார். இயந்திரங்கள் மற்றும் அதன் அதிர்வெண்ணின் துவக்கம் முதன்முறையாக வாட் அவர்களால் மேற்பார்வையிடப்பட்டது, பின்னர் அந்த வேலையை செய்ய அந்த நிறுவனத்தில் ஆண்கள் பணியமர்த்தப்பட்டனர். முதலில் இவை பெரிய இயந்திரங்களாக இருந்தன. உதாரணமாக, ஒரு உருளை 50 அங்குல விட்டம் கொண்டதாகவும் மற்றும் 24 அடி உயர உயரம் கொண்டதாகவும் இருந்தது. இந்த இயந்திரம் அமைப்பதற்ட்கென்று தனிப்பட்ட கட்டிடம் தேவைப்பட்டது. பவுல்டன் மற்றும் வாட் தங்களின் ஆண்டு வருமானமாக, புதிய இயந்திரத்தால் சேமிக்கப்படும் நில்க்கரியின் அளவில் மூன்றில் ஒரு பகுதியை தங்களின் வேலைக்கான பணமாக பெற்றனர்.
இந்த ஆரம்ப இயந்திரங்கள் பவுல்டன் மற்றும் வாட் ஆகியோரால் தயாரிக்கப்படவில்லை, ஆனால் வாட் அவர்களால் வரையப்பட்ட வரைபடங்களின் அடிப்படையில் மற்றவர்களிடமிருந்து தயாரிக்கப்பட்டது, வாட் அவர்கள் ஆலோசக பொறியியலாளராக மட்டுமே பணியாற்றினார். இயந்திரங்கள் மற்றும் அதன் அதிர்வெண்ணின் துவக்கம் முதன்முறையாக வாட் அவர்களால் மேற்பார்வையிடப்பட்டது, பின்னர் அந்த வேலையை செய்ய அந்த நிறுவனத்தில் ஆண்கள் பணியமர்த்தப்பட்டனர். முதலில் இவை பெரிய இயந்திரங்களாக இருந்தன. உதாரணமாக, ஒரு உருளை 50 அங்குல விட்டம் கொண்டதாகவும் மற்றும் 24 அடி உயர உயரம் கொண்டதாகவும் இருந்தது. இந்த இயந்திரம் அமைப்பதற்க்கென்று தனிப்பட்ட கட்டிடம் தேவைப்பட்டது. பவுல்டன் மற்றும் வாட் தங்களின் ஆண்டு வருமானமாக, புதிய இயந்திரத்தால் சேமிக்கப்படும் நில்க்கரியின் அளவில் மூன்றில் ஒரு பகுதியை தங்களின் வேலைக்கான பணமாக பெற்றனர்.

== கெளரவங்கள் ==
== கெளரவங்கள் ==

06:25, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

ஜேம்ஸ் வாட்
James Watt
பிறப்பு(1736-01-19)சனவரி 19, 1736
ஸ்கொட்லாந்து, பிரித்தானியா
இறப்புஆகத்து 25, 1819(1819-08-25) (அகவை 83)[1]
இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்

ஜேம்ஸ் வாட் (James Watt, ஜனவரி 19, 1736ஆகஸ்ட் 25, 1819) ஒரு ஸ்காட்டியப் புத்தாக்குனரும், இயந்திரப் பொறியாளரும் ஆவார். நீராவி இயந்திரத்துக்கு இவர் செய்த மேம்பாடுகளே பிரித்தானியாவிலும், உலகின் பிற பாகங்களிலும் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தன.

ஜேம்ஸ் வாட் 1736 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் நாள் ஐந்தாம் கிளைடில் உள்ள கிரீனாக் என்னும் துறைமுகப் பகுதியில் பிறந்தார். இவரது தந்தையார் கப்பல் கட்டுனராகவும், கப்பல் உரிமையாளராகவும், ஒப்பந்தகாரராகவும் இருந்தார். ஜேம்ஸ் வாட்டின் தாயார் அக்னஸ் முயிர்ஹெட், மதிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். நன்றாகப் படித்திருந்தார்.

வாட் ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லவில்லை. ஆனால், பெரும்பாலும் வீட்டிலேயே தாயாரிடம் கற்றுவந்தார். கணிதம் கற்பதில் இவர் அதைக ஆர்வம் காட்டிவந்தார். இவர் 18 வயதாக இருந்தபோது இவரது தாயார் காலமானார். இவரது தந்தையின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. கருவிகள் செய்வது பற்றிக் கற்றுக்கொள்வதற்காக இலண்டனுக்குச் சென்ற வாட், ஒராண்டின் பின்னர் திரும்பவும் ஸ்காட்லாந்துக்கு வந்தார். அங்கே அவர் தனது சொந்த கருவிகள் செய்யும் தொழில் தொடங்க எண்ணினார்.

முதல் நீராவி இயந்திரம்

1784 ஆம் ஆண்டில் பவுல்டன் மற்றும் வாட் அவர்களால் வரையப்பட்ட நீராவி இயந்திரத்தின் மாதிரிப்படம்

1776 ஆம் ஆண்டில், முதல் நீராவி இயந்திரங்கள் நிறுவப்பட்டு, வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்தன. இந்த முதல் இயந்திரங்கள் விசையியக்கக் திறனை வழங்க குழாய்களுக்குப் பயன்படுத்தப்பட்டன, அவை தண்டுகளின் அடிப்பகுதியில் குழாய் கம்பிகளை நகர்த்துவதற்கான ஒரே பரிமாற்ற இயக்கத்தை மட்டுமே உருவாக்கின. இந்த வடிவமைப்பு வணிகரீதியாக வெற்றிகரமாக இருந்தது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வாட் அதிக இயந்திரங்களை நிறுவினார், குறிப்பாக கார்ன்வால் என்ற இடத்தில் உள்ள சுரங்கங்களில் இருந்து நீரை வெளியேற்றுவதற்காக நிறுவினார்.

இந்த ஆரம்ப இயந்திரங்கள் பவுல்டன் மற்றும் வாட் ஆகியோரால் தயாரிக்கப்படவில்லை, ஆனால் வாட் அவர்களால் வரையப்பட்ட வரைபடங்களின் அடிப்படையில் மற்றவர்களிடமிருந்து தயாரிக்கப்பட்டது, வாட் அவர்கள் ஆலோசக பொறியியலாளராக மட்டுமே பணியாற்றினார். இயந்திரங்கள் மற்றும் அதன் அதிர்வெண்ணின் துவக்கம் முதன்முறையாக வாட் அவர்களால் மேற்பார்வையிடப்பட்டது, பின்னர் அந்த வேலையை செய்ய அந்த நிறுவனத்தில் ஆண்கள் பணியமர்த்தப்பட்டனர். முதலில் இவை பெரிய இயந்திரங்களாக இருந்தன. உதாரணமாக, ஒரு உருளை 50 அங்குல விட்டம் கொண்டதாகவும் மற்றும் 24 அடி உயர உயரம் கொண்டதாகவும் இருந்தது. இந்த இயந்திரம் அமைப்பதற்க்கென்று தனிப்பட்ட கட்டிடம் தேவைப்பட்டது. பவுல்டன் மற்றும் வாட் தங்களின் ஆண்டு வருமானமாக, புதிய இயந்திரத்தால் சேமிக்கப்படும் நில்க்கரியின் அளவில் மூன்றில் ஒரு பகுதியை தங்களின் வேலைக்கான பணமாக பெற்றனர்.

கெளரவங்கள்

வாட் தான் வாழ்ந்த காலத்திலேயே கெளரவிக்கப்பட்டிருக்கிறார். 1784 ஆம் ஆண்டில் அவர் எடின்பரோவின் ராயல் சொசைட்டி உறுப்பினராக கெளரவிக்கப்பட்டார், மேலும் 1787 ஆம் ஆண்டில் ராட்டர்டாமின் செய்முறைத் தத்துவத்திற்கான பட்டாவியன் சங்கத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1789 ஆம் ஆண்டில் கட்டட பொறியாளர்களுக்கான ஸ்மிட்டோனிய சங்கத்தின் உயர்மட்ட குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] 1806 ஆம் ஆண்டில், கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தின் சட்டத்திற்க்கான கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. பிரஞ்சு அகாடமி அவரை ஒரு அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினராக தேர்ந்தெடுத்தது மற்றும் 1814 இல் ஒரு வெளிநாட்டு இணைப்பாளராக நியமிக்கப்பட்டார். [3]

வாட் என்ற திறனுக்கான அளவீட்டு அலகு (அனைத்துலக முறை அலகுகள்(SI) International System of Units (or "SI")) முறையாக , நீராவி இயந்திரத்தின் வளர்ச்சிக்கு ஜேம்ஸ் வாட்டின் பங்களிப்பிற்காக அவரது பெயரில் வாட் என்று பெயரிடப்பட்டது, மற்றும் 1889 ஆம் ஆண்டில் அறிவியல் மேம்பாட்டிற்கான பிரித்தானிய சங்கத்தின் இரண்டாம் காங்கிரஸால் இந்த அலகு ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் 11 வது 1960 இல் திறன் (இயற்பியல்) சர்வதேச அமைப்பில் (அல்லது "SI") வாட் என்ற அலகு இணைக்கப்பட்டது.

29 மே 2009 அன்று இங்கிலாந்து வங்கி தனது புதிய £ 50 மதிப்புக் கொண்ட பவுண்டு ஸ்டெர்லிங் பணத்தாளில் பவுல்டான் மற்றும் வாட்டின் உருவங்கள் அச்சிடப்படும் என்று அறிவித்தது. இங்கிலாந்து வங்கியின் பணத்தாள் வரலாற்றில், இரு நபர்களின் உருவங்கள் அச்சிடப்படுவது இதுவே முதல் முறையாகும். [4] இந்த பண்த்தாள் நவம்பர் 2 இல் புழக்கத்திற்க்கு வரும என்று செப்டம்பர் 2011 இல் அறிவிக்கப்பட்டது. [5]

நினைவிடங்கள்

ஜேம்ஸ் வாட் நினைவுக் கல்லூரி, கிரின்நாக் .

வாட் அவர்களின் பூத உடல், பர்மிங்காம் நகரில், ஹேண்ட்ஸ்வொர்தில் உள்ள புனித மேரி தேவாலயத்தின் மைதானத்தில் புதைக்கப்பட்டது. பின்நாளில் வாட் அவர்களின் கல்லறையின் மேல் தேவாலயத்தின் கட்டிடம் விரிவாக்கம் செய்யப்பட்டதன் காரணமாக, அவருடைய கல்லறை இப்போது தேவாலயத்தில் அடியில் புதையுண்டிருப்பதாக நம்பப்படுகிறது.[6]

வாட் தனது ஓய்வு வாழ்க்கை நேரத்தை பெரும்பாலும் கேரட் அறை என்று அழைக்கப்படும் பட்டறையில் கழித்தார். இந்த அறை வாட் மறைவுக்குப் பிறகு 1853 ஆம் ஆண்டுவரை யவராலும் பயன்படுத்தப்படாமலும் கவனிக்கப்படாமலும் விடப்பட்டது. அதன் பிறகு வாட் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் J. P. முயர்ஹெட் அவர்களால் முதலில் பார்க்கப்பட்டது.[7] அதன் பிறகு, அந்த அறை எப்போதாவது பார்வையிடப்பட்டது, ஆனால் ஒரு புனித சன்னதி போல் தீண்டப்படாமல் இருந்தது. மேலும் வாட்டின் அறை காப்புரிமை அலுவலகமாக மாற்றுவதற்கு ஒரு முன்மொழிவு இருந்தபோதும் எந்த ஒரு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருந்தது. 1924 ஆம் ஆண்டில் வாட்டின் அறை இடித்துத் தள்ளியபோது, அறை மற்றும் அதன் அனைத்து பொருட்களும் அறிவியல் அருங்காட்சியகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன, அங்கு அதன் மாதிரி மீண்டும் உருவாக்கப்பட்டது. இது பல வருடங்கள் பார்வையாளர்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது, ஆனால் கேலரி மூடப்பட்டிருந்த போது அந்த பட்டறையின் சுவர்கள்- முழுவதுமாக பெயர்தெடுக்கப்பட்டு அப்படியே, பாதுகாக்கப்பட்டு, மார்ச் 2011 இல் ஒரு புதிய நிரந்தர அறிவியல் அருங்காட்சியக கண்காட்சியின் ஒரு பகுதியாக "ஜேம்ஸ் வாட் மற்றும் எமது உலகம்" என்ற தலைப்பிட்ப்பட்டு, பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.[8]

மேற்கோள்கள்

  1. Although a number of otherwise reputable sources give his date of death as 19 August 1819, all contemporary accounts report him dying on 25 August and being buried on 2 September. The earliest known instance of the 19 August date appearing in the literature is in a book published in 1901.
  2. Watson, Garth (1989). The Smeatonians: The Society of Civil Engineers. Thomas Telford. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7277-1526-7.
  3. Dickinson, p197-198
  4. Steam giants on new £50 banknote, BBC, 30 May 2009, பார்க்கப்பட்ட நாள் 22 June 2009
  5. Heather Stewart. "Bank of England to launch new £50 note". the Guardian.
  6. Kelly, E.R (1878). The Post Office Directory of Birmingham. London: Kelly and co. p. 176.
  7. "Garret workshop of James Watt". Makingthemodernworld.org.uk. பார்க்கப்பட்ட நாள் 12 March 2011.
  8. "James Watt's legendary 'magical retreat' to be revealed at Science Museum". (Press Release). Science Museum. 1 March 2011. Archived from the original on 25 March 2011. பார்க்கப்பட்ட நாள் 25 March 2011. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_வாட்&oldid=2306104" இலிருந்து மீள்விக்கப்பட்டது